நெருக்கடியில் ஆஸ்திரேலியா
3/21/2016 2:55:02 PM
பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் போட்டியில் குரூப் 2ல் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா-வங்கதேச அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், இன்று வெற்றிக்கணக்கை துவங்க வேண்டிய நெருக்கடியில் உள்ளன. இந்த போட்டியில் யார் தோற்றாலும், அவர்களுக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கி விடும். டெஸ்ட், ஒன் டே வில் நம்பர் ஒன் அணியான ஆஸி. இதுவரை டி20 உலக கோப்பையை வென்றதில்லை. இதனால் ஆஸி. கூடுதல் நெருக்கடியில் களம் இறங்குகிறது.