அனுஷ்கா சர்மா டுவீட் ...
3/21/2016 2:54:44 PM
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலர்களாக வலம் வந்தனர். இந்நிலையில், விராட் கோஹ்லி உடனடியாக திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில், அனுஷ்காவுக்கு அதில் விரும்பம் இல்லாததால் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்த விராட் கோஹ்லி தற்போது நல்ல பார்ம்மில் உள்ளார். அனுஷ்கா சர்மாவுடன் காதலை புதுப்பித்துக் கொள்ள கோஹ்லி, முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், அனுஷ்கா அதனை கண்டுகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோஹ்லி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில், அனுஷ்கா சர்மா, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.