நோட்டா ஸ்டிக்கர்: கட்சிகள் அதிர்ச்சி
3/19/2016 12:35:41 PM
திருச்சி: ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டு, வேட்பாளர் பட்டியலை அறிவித்தால்தான் தமிழக தேர்தல் பிரசாரக் களம் சூடுபிடிக்கும். எந்த தேர்தலிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததே இல்லை. அதற்கு சாத்தியமும் குறைவு. அதிகபட்சமாக 85 சதவீதம் வரை தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.இந்நிலையில் ‘எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லையா? நோட்டாவை பயன்படுத்துங்க’ என்ற ஸ்டிக்கரை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. திருச்சி கலெக்டர் அலுவலக செய்தி மக்கள் ெ தாடர்புத்துறை பிரசார வாகனத்தில் இந்த ஸ்டிக்கர் அதிகம் ஒட்டப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினருக்கு வேட்டு வைக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரசாரம் அமைந்துள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.அவர்கள் கூறுகையில், ‘ வாக்களிக்க விருப்பமில்லையெனில் நோட்டாவை பயன்படுத்துங்க என அதிகமாக விளம்பரம் செய்வது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களை திசைதிருப்பும் வகையில் உள்ளது. இன்னாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என கூற தேர்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. அப்படிஇருக்கையில் நோட்டாவை பயன்படுத்துங்கள் எனக்கூறுவது எந்த வகையில் நியாயம்? உடனே அந்த விளம்பரத்தை அழித்து, ரத்து செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளனர்.