இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருச்சியில் நாளை திராவிடர் கழக மாநாடு மு.க. ஸ்டாலின், இளங்கோவன் பங்கேற்பு

3/18/2016 3:02:11 PM
ஆளுனர் உரை மீது சட்டசபையில் நாளை விவாதம் மருத்துவ மாணவர் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: இன்ஜினியரிங் படிப்புக்கு ரேண்டம் எண்ணும் வெளியாகிறது

திருச்சி: திராவிடர் கழக 2 நாள் மாநாடு திருச்சி அடுத்த சிறுகனூரில் நாளை காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. முதல் நாள் மாநாட்டுக்கு சாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு என பெயரிடப்பட்டு உள்ளது.மாநாட்டு திடலுக்கு பெரியார் உலகம் என பெயரிடப்பட்டுள்ளது. மாநாட்டு அரங்கத்திற்கு அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் ஆகியோரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.மாநாட்டையொட்டி கண்காட்சியும் நடக்கிறது. குஜராத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கோகுல கிருஷ்ணன் கண்காட்சியை திறந்து வைக்கிறார். திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் தலைவர்களின் படத்திறப்பு விழா நடக்கிறது. திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என். நேரு அண்ணா படத்தை திறந்து வைக்கிறார். இதுபோல பல்வேறு தலைவர்களின் படங்கள் மாநாட்டில் திறந்து வைக்கப்படுகிறது.

2ம் நாள் மாநாடு: 2ம் நாள் மாநாடு சமூகநீதி மாநாடாக நடக்கிறது. திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமை தாங்குகிறார். மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், சுப. வீரபாண்டியன், நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலை திருச்சியில் இன்று தி.க. தலைவர் வீரமணி கூறினார்.

மேலும் சில
  • ஆளுனர் உரை மீது சட்டசபையில் நாளை விவாதம்



  • மருத்துவ மாணவர் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: இன்ஜினியரிங் படிப்புக்கு ரேண்டம் எண்ணும் வெளியாகிறது



  • பைக், லாரி நேருக்கு நேர் மோதல்: 2 மாணவர் உள்பட 4 பேர் பலி



  • நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்



  • கோயில் கருவறையில் புகுந்த நாகபாம்பு பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு



  • கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோனில் பயங்கர தீ 3 மணி நேரம் தொடர் வெடிச்சத்தம் கடை உரிமையாளர் கைது



  • 6 டன் எடை கொண்ட ஆரோக்கிய அன்னை கெபி இடமாற்றம்



  • 21 குண்டுகள் முழங்க ஐபிஎஸ் அதிகாரி உடல் அடக்கம்



  • யோகா தினத்தை முன்னிட்டு பொன்னேரி பள்ளி மாணவர்கள் பேரணி



  • மாடம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 5 லட்சத்தில் புதிய மின் டிரான்ஸ்பார்மர்



Facebook

Twitter

Madonna will kattippitikka hero Condition
ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]