கிரிக்கெட் வீரர் கெய்லுக்கு சினேகா உல்லால் முத்தம்
3/18/2016 2:51:36 PM
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வரை கிரிக்கெட் வீரர்களுடன் நடிகைகள் டேட்டிங் செய்வதை அந்தஸ்த்தாக பாவித்தனர். டோனி, யுவராஜ் சிங் என பல வீரர்களுடன் லட்சுமி ராய் உள்ளிட்ட சில நடிகைகளின் பெயர்கள் இணைத்து கிசுகிசுக்கப்பட்டன. இது பரபரப்பானதையடுத்து டேட்டிங் விவகாரங்கள் ஓரளவுக்கு அடங்கின. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விராத் கோஹ்லி, அனுஷ்கா சர்மா டேட்டிங் விவகாரம் பெரிதாக அலசப்பட்டு வருகிறது. அவர்களும் சமீபத்தில் பிரேக் அப் செய்துவிட்டதாக தெரிகிறது.இந்த விவகாரத்தில் புதிதாக கணக்கு ஆரம்பித்திருக்கிறார் சினேகா உல்லால். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள இவர் மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் அணி வீரர் கிரிஸ் கெய்லுடன் இரவு பார்ட்டியில் டான்ஸ் ஆடி டேட்டிங் செய்ததாக புகைப்படம் வெளியிட்டுள்ளதுடன், ‘கெய்ல் ரொம்பவே கூல்’ என பரவசப்பட்டிருக்கிறார். இது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.