இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

உடல் பருமனை குறைக்கும் வெற்றிலை

3/17/2016 3:10:05 PM
அசாம் காங். அமைச்சர் வீட்டில் ரெய்டு வரம்பு மீறி செயல்பட்ட தேர்தல் கண்காணிப்பாளருக்கு கல்தா தேர்தல் ஆணையம் அதிரடி சூடு பிடிக்கும் மேற்கு வங்க தேர்தல் களம் மம்தாவுக்கு எதிராக மாஜி பெண் எம்பியை களம் இறக்கியது காங்கிரஸ்


நரம்புகளை பலப்படுத்த கூடியதும், ஞாபக சக்தியை அதிகரிக்கவல்லதும், உடல் பருமனை குறைக்க கூடியதும், யானைக்கால் நோய், விரைவீக்கத்துக்கு மருந்தாக விளங்குவதுமான வெற்றிலையின் பயன்கள் குறித்து பார்ப்போம். தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன.  இது வாயுவை வெளித்தள்ள கூடியது. நோய்கள் வராமல் தடுக்கிறது. நுண்கிருமிகளை போக்க கூடியது.வெற்றிலையை பயன்படுத்தி உடல் பருமனை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.

வெற்றிலையை கொண்டு நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும். மூளை பலம் பெறுவதுடன் ஞாபக சக்தி அதிகரிக்கும். வெற்றிலையை பயன்படுத்தி மூச்சுதிணறல், நெஞ்சக சளியை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் சிறிது கடுகு எண்ணெய்யை சூடுபடுத்தவும். இதில் வெற்றிலைகளை வைத்து லேசாக வதக்கவும். இந்த வெற்றிலைகளை இளஞ்சூட்டில் மார்பில் வைக்கும்போது நெஞ்சக சளி கரைந்து வெளியேறும்.

வெற்றிலையை பயன்படுத்தி யானைக்கால் ஜுரம், விரைவீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். 5 வெற்றிலையை துண்டுகளாக்கி, அதனுடன் கால் ஸ்பூனுக்கும் சற்று குறைவாக உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்து வர யானைக்கால் நோய், விரைவீக்கம் சரியாகும்.
விட்டுவிட்டு காய்ச்சல் ஏற்பட்டு கால்கள் சிவந்து சிறிது சிறிதாக பருத்து கொண்டே வருவது யானைக்கால் நோய். நுண்கிருமிகளால் இது ஏற்படும்.

இந்த வீக்கத்தை வெற்றிலை தேனீர் குறைக்கும். விரைவாதம் ஏற்படுவதால் நெறிக்கட்டி காய்ச்சல் வரும். இதை தடுக்க இந்த தேனீர் பயன்படுகிறது.
வெற்றிலையை பயன்படுத்தி கீழ்வாதம், விரைவாதத்துக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய்யுடன், நீர்விடாமல் அரைத்த வெற்றிலை பசையை சேர்க்கவும். இதை பத்தாக போட்டுவர கீழ்வாதம், விரைவாதம் சரியாகும்.

வாய் சிவப்பதற்காக பயன்படுத்த கூடிய வெற்றிலையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது. நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால், காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகிறது. நன்றி: சன் டி.வி.

மேலும் சில
  • சிறுநீரக கற்களை கரைக்கும் கற்பூரவல்லி



  • கொழுப்பு சத்தை குறைக்கும் சோம்பு



  • ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வெந்தயம்



  • கர்ப்பகாலத்தில் வாந்தியை போக்கும் கறிவேப்பிலை



  • மாதவிலக்கு பிரச்னையை போக்கும் வாழைப்பூ



  • இளநரையை போக்கும் சீயக்காய்



  • உடல் எடையை குறைக்கும் கொள்ளு



  • முகப்பருவை போக்கும் வில்வம்



  • பசியை தூண்டும் சீரகம்



  • மனச்சோர்வை போக்கும் சப்போட்டா



Facebook

Twitter

Regina-Nandita clash
ரெஜினா-நந்திதா மோதல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]