திருப்பதி அருகே இன்று காலை விபத்து : வேன்-லாரி மோதி 6 பேர் பலி : கோயிலுக்கு சென்றபோது நேர்ந்த பரிதாபம்
3/15/2016 3:24:17 PM
திருமலை: திருப்பதி அருகே இன்று காலை வேனும் லாரியும் நேருக்குநேர் ேமாதிக்கொண்ட விபத்தில் பக்தர்கள் 6 பேர் இறந்தனர். கோயிலுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி அடுத்த தில்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 13பேர் ஒரு வேனில், நேற்றிரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு புறப்பட்டனர்.இன்று காலை 6.30 மணியளவில் ஆந்திர மாநிலம் சந்திரகிரி மண்டலம் அகராலா அருகே கோட்டை எதிர்புறம் உள்ள கூத்தலப்பட்டு-நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிரே நெல்லூரில் இருந்து வந்த லாரியும் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. வேன் முழுவதுமாக நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி வேனுக்குள் இருந்தவர்கள் கதறி துடித்தனர்.
இந்த விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 6 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து தொடர்பாக சந்திரகிரி போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் பலியானவர்கள் சுரேஷ், கவுரியம்மா, சுஜா, பார்வதியம்மா, ரம்யா, கிரண் என்று தெரியவந்துள்ளது. மது, நாகம்மா, முனியம்மா, ஷோபா, கோயப்பா, மல்லம்மா மற்றும் லாரி டிரைவர் ராமகிருஷ்ணா ஆகியோர படுகாயம் அடைந்தவர்கள் என்று தெரியவந்து உள்ளது.