மது அருந்துவதை மனைவி தட்டி கேட்டதால் கத்தியால் குத்திக்கொண்டு பழ வியாபாரி தற்கொலை: மாதவரத்தில் சோகம்
3/15/2016 3:23:01 PM
திருவொற்றியூர்: மது அருந்துவதை மனைவி தட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பழம் வெட்டும் கத்தியால் தனக்கு தானே வயற்றில் குத்தி பழ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.மாதவரம் பெரிய மாத்தூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் நந்தகோபால் (45). சாலையோரத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மோகனா. இவர்களுக்கு விக்னேஷ், துர்கா என்ற மகன், மகள் உள்ளனர்.நந்தகோபால் மது அருந்தும் பழக்கம் உடையவர். அடிக்கடி குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவும் இதுபோன்று மது அருந்தி விட்டு வந்ததை மனைவி தட்டி கேட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நந்தகோபால், பழம் வெட்டும் கத்தியால், தனக்கு தானே வயிற்றில் குத்தி கொண்டார். பலத்த ரத்த காயத்துடன் அலறி துடித்தார். இதை பார்த்ததும் மோகனா அதிர்ச்சியடைந்து கதறினார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நந்தகோபாலை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்ைச அளித்தும் பலனின்றி நந்தகோபால் இறந்தார்.இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.