கல்லூரி மாணவர்கள் தற்கொலை டி.ஜி.பி.யிடம் புகார்
3/15/2016 3:18:39 PM
சென்னை: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கவுதமன் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது : தமிழகம் முழுவதும் கடந்த 10 தினங்களில் 4 கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் கொடுத்த அழுத்தமே காரணம். சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம். கூடுதல் டிஜிபி திரிபாதி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பினர் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிப்போம் என்றார்.