இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பிரதமருக்கு கடிதம் எழுதுவதால் துயரம் களையப்படுகிறதா? தமிழக மீனவர்களை அதிமுக அரசு ஏமாற்றுகிறது கருணாநிதி அறிக்கை

3/15/2016 3:18:10 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வந்தாரை வாழவைக்கும்  தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள்,  இன்னும் எத்தனை காலம்  தான் இலங்கை கடற்படையினரை கண்டு அஞ்சி அஞ்சி சாக வேண்டுமோ? தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவதும், அச்சுறுத்துவதும், கைது செய்வதும் என்ற மனிதாபிமானமற்ற  நடவடிக்கை தொடர் கதையாகவே நீண்டு வருகிறது. இதுபற்றி,  நமது மீனவர்கள் கைது செய்யப்படுவது தான் தாமதம், அடுத்த நாளே  பிரதமருக்கு நமது முதலமைச்சர் ஒரு கடிதம் எழுதியதாக ஏடுகளுக்கெல்லாம் செய்தி கொடுத்து விடுவார்கள்.  ஆனால் கடிதத்தால் மீனவர்களின்  துயரம் களையப்படுகிறதா என்ன?

  மத்திய அரசுக்கோ, பிரதமருக்கோ  வெறும் கடிதம் மாத்திரம் இவ்வாறு எழுதி விட்டால் போதுமா?   முதல் அமைச்சரோ,  மூத்த அமைச்சர்களோ, துறையின் அமைச்சரோ,  டெல்லி சென்று இது பற்றி முறையிட வேண்டாமா? 37 எம்.பி.க்கள் இருப்பதால், அதிமுகவின் உதவி பாஜ அரசுக்கு தேவைப்படும்  நிலையில்,  மீனவர் நலனுக்காக, அரசியல் ரீதியாக  அழுத்தம் கொடுக்க வேண்டியது தானே?  வெறும் கடிதத்தின் மூலமாக தமிழ்நாட்டு மீனவர்களை தமிழக அதிமுக அரசு எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது?  இந்தியாவோடு ஒப்பிடும்போது  இலங்கை எவ்வளவு சிறிய நாடு?  இருந்தாலும் அந்த நாட்டின் கடற்படையினர் செய்யும் அட்டூழியத்திற்கு பெரிய நாடான  இந்தியா  ஒரு முடிவு கட்ட வேண்டாமா? மனம் இருந்தால் மார்க்கம்  உண்டல்லவா?   

 கூட்டம் நடத்துகிறோம், பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்றெல்லாம்  சொல்லிக் கொண்டே பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால், மீனவர் வாழ்க்கை என்ன ஆவது? தமிழக மீனவர்கள்  28 பேரை நான்கு படகுகளோடு  இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.  கடந்த 12ம் தேதி 23 மீனவர்கள் இதே இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு வேண்டாமா?  மத்திய அரசு  இனியும் இதுவரை தாமதித்து வந்ததைப் போல, தாமதிக்காமல் உடனடியாகத் தலையிட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வுகாண உளப் பூர்வமாக  உண்மையான முயற்சி எடுக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • ஸ்டாலின் திடீர் நடைபயணம்



  • விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்?



  • ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் குடியிருப்போர் சங்கங்களிடம் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு



  • உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் வாங்க மாட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி



  • மெரினா கடற்கரையில் குளித்த மாணவன் உடல் கரை ஒதுங்கியது



  • காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு காரணம் என்ன?



  • அதிகரிக்கும் மின் பற்றாக்குறை



  • 4வது கட்ட பட்டியல் வெளியீடு பாஜ வேட்பாளர் 26 பேர் அறிவிப்பு



  • ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் சஸ்பெண்ட் ரத்து சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு



  • எம்பிபிஎஸ்-பிடிஎஸ் படிப்புக்கு மே 9முதல் விண்ணப்பிக்கலாம்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]