உலக கோப்பை டி20 தொடரில் ஒரே அணியில் கோஹ்லி, ஸ்டெயின்
3/15/2016 3:11:14 PM
கொல்கத்தா: தலைப்பை படித்தவுடன் ஆச்சரியமாக இருக்கிறதா? இது ரியல் அணி இல்லை. கனவு அணி. பிரபல சமூக வலைதளமான டிவிட்டர், 2016 டி20 உலக கோப்பைக்கான கனவு அணியை அறிவித்துள்ளது. அதில் தான் விராத் கோஹ்லியும், டேல் ஸ்டெயினும் ஒரே அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்த கனவு அணியில் 5 இந்திய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கேப்டன்/விக்கெட் கீப்பராக டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 12 மாதங்களில் அதிகம் குறிப்பிடப்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என டிவிட்டர் தெரிவித்துள்ளது. கனவு அணி: கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்), முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்), விராத் கோஹ்லி, அஸ்வின், ஹர்பஜன் சிங், ரெய்னா, டோனி (5 பேரும் இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), அப்ரிடி, வகாப் ரியாஸ் (பாகிஸ்தான்), டேல் ஸ்டெயின் (தென் ஆப்பிரிக்கா).