இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது

3/15/2016 2:42:23 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. கடுமையான சோதனைகளுக்கு பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரத்து 54 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 223 மாணவ மாணவியர் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இந்த ஆண்டு தேர்வு நேரம் மாற்றப்பட்டதால் காலை 9 மணிக்கே மாணவ மாணவியர் தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கே மாணவ மாணவியர் அந்தந்த தேர்வு மையங்களுக்கு வந்து சேர்ந்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  கடந்த வாரமே ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு இன்று காலைதான் மாணவ மாணவியரை பள்ளிக்கு வரவழைத்து ஹால்டிக்கெட்டுகளை ஒப்படைத்தனர். முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது.

காலை 9 மணிக்கே அனைத்து மாணவ மாணவியரும் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக மாணவர்களை தனியாகவும், மாணவியரை தனியாகவும் ஆசிரியர், ஆசிரியைகள் சோதனை செய்தனர். துண்டுச் சீட்டு எடுத்து செல்ல வசதியாக உள்ள சிறிய பைகள், ஜாமெட்ரி பாக்ஸ் போன்றவை எடுத்துசெல்ல அனுமதிக்கவில்லை. தண்ணீர் பாட்டில், பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்டவை எடுத்து செல்ல அனு்மதிக்கப்பட்டது. தேர்வு அறைக்குள் சென்றதும் சரியாக 9 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டது. அதில் உள்ள முகப்பு தாளில் மாணவர் பெயர், பதிவு எண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்டிருந்தது. அவற்றை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பம் இடவேண்டும்.

இதற்காக 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதற்கு பிறகு 9.05க்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதை படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்பட்டது. சரியாக 9.15க்கு விடை எழுதத் தொடங்கினர். பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்குவதை அடுத்து 3369 தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தனியார் பள்ளிகளில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் அந்த பள்ளியின் உரிமையாளர், முதல்வர் உள்ளிட்ட யாரும் பள்ளி வளாகத்துக்குள் வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் என்ன தண்டனை என்பது குறித்த விவரங்கள் அடங்கிய போஸ்டர்கள் தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டு இருந்தது.

துண்டுச் சீட்டு ைவத்திருத்தல், பார்த்து எழுத முயற்சித்தல், விடைத்தாள் மாற்றிக் கொள்வது, ஆள் மாறாட்டம் செய்வது உள்ளிட்டவை குற்றச் செயல்களாக கருதப்படும் என்பதால் அவற்றை செய்தால் 2 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தவிர விடைத்தாளில் அனைத்து பக்கங்களிலும் விடைகளை எழுதிவிட்டு அவற்றை மாணவர்களே திரும்ப அனைத்து பக்கங்களையும் குறுக்கு கோடிட்டு அடிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையில் 24 கைதிகளும், 6 விசாரணை கைதிகளும், வேலூர் சிறையில் 17 கைதிகளும், கடலூர் சிறையில் 11 கைதிகளும் இந்த தேர்வினை எழுதுகின்றனர். மொத்தம் 11 பெண்கள் உட்பட 58 கைதிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும் சில
  • ஸ்டாலின் திடீர் நடைபயணம்



  • விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்?



  • ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் குடியிருப்போர் சங்கங்களிடம் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு



  • உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் வாங்க மாட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி



  • மெரினா கடற்கரையில் குளித்த மாணவன் உடல் கரை ஒதுங்கியது



  • காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு காரணம் என்ன?



  • அதிகரிக்கும் மின் பற்றாக்குறை



  • 4வது கட்ட பட்டியல் வெளியீடு பாஜ வேட்பாளர் 26 பேர் அறிவிப்பு



  • ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் சஸ்பெண்ட் ரத்து சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு



  • எம்பிபிஎஸ்-பிடிஎஸ் படிப்புக்கு மே 9முதல் விண்ணப்பிக்கலாம்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]