இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காலை 9 மணிக்கே தேர்வுகள் தொடங்கும் 10ம் வகுப்பு தேர்வுகள் நாளை தொடக்கம் 6600 பறக்கும் படை தயார்

3/14/2016 3:05:45 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது. முறைகேடுகளை தடுக்க 6600 பறக்கும் படையை தேர்வுத்துறை அமைத்துள்ளது.தமிழகம், புதுச்சேரியில் செயல்படும் 12053 பள்ளிகளை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து 564 மாணவ மாணவியரும் எழுதுகின்றனர்.
 
தமிழகம் புதுச்சேரியில் 3371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடந்த 10ம் வகுப்பு தேர்வில் கலந்து கொண்டவர்களை விட 11 ஆயிரத்து 319 பேர் இந்த ஆண்டு குறைவாக தேர்வு எழுதுகின்றனர். பள்ளிகளில் படிப்போரில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 301 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 20 ஆயிரத்து 884 பேர் மாணவியர். மாணவியரை விட மாணவர்கள் 30 ஆயிரத்து 417 பேர் கூடுதலாக எழுதுகின்றனர்.சென்னை மாவட்டத்தில் 574 பள்ளிகள் மூலம் மொத்தம் 53  ஆயிரத்து 159 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்காக சென்னை மாவட்டத்தில் மட்டும் 209 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 298 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 041 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 48 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, திருச்சி, பாளையங்கோட்டை, சென்னை புழல் சிறையில் உள்ள 250 கைதிகளும் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.தமிழ் வழியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்  வழியில் படிப்போர் 6 லட்சத்து 70 ஆயிரத்து 795 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களுடன் டிஸ்லெக்ஸ்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகள் என 3420 பேருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை கண்காணிக்க 6600 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 9 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • அத்வானி மனைவி மறைவு கருணாநிதி இரங்கல்



  • விஜயகாந்தை பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஓட்டம்



  • திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • பெரம்பலூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் போயஸ் கார்டனில் குவிந்த அதிமுகவினர்களால் பரபரப்பு



  • லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி



  • தேர்தல் விதிகளை காரணம் காட்டி தமிழகத்தில் வணிகர்கள் நசுக்கப்படுகின்றனர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு



  • அத்வானி மனைவி மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்



  • நந்தம்பாக்கத்தில் இன்று மாலை திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திண்டுக்கல் லியோனி பங்கேற்பு



  • குட்டையில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு



  • யுகாதி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]