இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நகை வியாபாரிகளின் போராட்டத்தை ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

3/14/2016 3:04:54 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் 2016ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் தங்க நகைக்கு 1 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நகை வியாபாரிகள், நகை பட்டறைகளில் பணியாற்றி வரும் பொற்கொல்லர்கள், தங்க நகை தயாரிப்பாளர்கள் எல்லாம் இணைந்து நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியிடம் முறையிட்டும் இன்னும் அந்த வரி நீக்கப்படவில்லை என்பது நகை வியாபாரிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தங்கத்திற்கு 10 சதவீத இறக்குமதி வரியும் ஒரு சதவீத வாட் வரியும் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்க நகைக்கு ஒரு சதவீத கலால் வரி என்று தற்போது மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருப்பது தங்க நகை தொழிலை நசுக்கி விடும். அதுமட்டுமின்றி பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கானோரை பாதிக்கும் இந்த கலால் வரி விதிப்பு பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுவரை வாய் திறக்கவில்லை.
 
மத்திய நிதி அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி கூட நகை வியாபாரிகளின் கோரிக்கையை வலியுறுத்தவில்லை. நகை தொழிலையும், நகை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களையும் பாதிக்கும் இந்த கலால் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி, போராடி வரும் நகை வியாபாரிகளின் கோரிக்கையை பரிசீலித்து, கலால் வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் சில
  • அத்வானி மனைவி மறைவு கருணாநிதி இரங்கல்



  • விஜயகாந்தை பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஓட்டம்



  • திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • பெரம்பலூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் போயஸ் கார்டனில் குவிந்த அதிமுகவினர்களால் பரபரப்பு



  • லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி



  • தேர்தல் விதிகளை காரணம் காட்டி தமிழகத்தில் வணிகர்கள் நசுக்கப்படுகின்றனர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு



  • அத்வானி மனைவி மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்



  • நந்தம்பாக்கத்தில் இன்று மாலை திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திண்டுக்கல் லியோனி பங்கேற்பு



  • குட்டையில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு



  • யுகாதி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]