பாசிட்டிவான மனநிலையில் டோனி உள்ளார் சச்சின் நம்பிக்கை
3/14/2016 2:53:28 PM
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டி: உலகில் எந்த வீரராலும், வாழ்நாள் முழுவதும் நல்ல பார்மில் விளையாட முடியாது. அப்படி விளையாட வீரர்கள் இயந்திரம் கிடையாது. ஆசிய கோப்பையின் போது, டோனியின் பேட்டில் பந்துகள் பட்ட போது எழுந்த சத்தத்தின் மூலம், அவர் பாசிட்டிவ்வான மனநிலையில் உள்ளார் என்பதை தெரிந்து கொண்டேன். சமீப காலங்களில் டோனி நன்றாக முதிர்ச்சியடைந்துள்ளார். பதற்றமாக இருந்தாலும், அதை அவர் வெளிக்காட்டாமல் இருப்பது நல்ல அறிகுறி. இந்திய அணிக்கு இது மிகவும் நல்லது. உலக ேகாப்பை டி20யில், பும்ரா முக்கிய நபராக இருப்பார். இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறலாம். போட்டியின் முதல் பந்தையே மெக்கல்லம் சிக்சருக்கு அனுப்பும் திறமை உடையவர். பயம் இல்லாத கிரிக்கெட்டை வெளிப்படுத்தியவர். அவர் இல்லாதது நியூசிலாந்துக்கு இழப்பு.