வெள்ளைக்கார நடிகைக்கு வீடு தேடிய தீபிகா
3/14/2016 2:52:40 PM
ரஜினியுடன் ‘கோச்சடையான்’ படத்தில் ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோன். பாலிவுட் நடிகையான இவர் தற்போது ‘தி ரிட்டர்ன் ஆப் ஸென்டர் கேஜ்’ ஹாலிவுட் படத்தில் வின் டீசல் ஜோடியாக நடித்து வருகிறார். இதேபடத்தில் வில்லியாக நடிக்கிறார் ஹாலிவுட் நடிகை ரூபி ரோஸ். அமெரிக்காவில் பல்வேறு பகுதியில் இதன் படப்பிடிப்பு நடப்பதுடன் ஹாலிவுட் ஸ்டுடியோவிலும் ஷூட்டிங் நடக்கிறது.கடற்கரை பகுதியில் வீடு எடுத்து தங்க விரும்பினார் ரூபி. வீடு தேட துணைக்கு வருமாறு தீபிகாவை அழைத்தார். அவரும் ஜாலியாக கிளம்பினார். அலைந்து திரிந்து பொருத்தமான வீட்டை கண்டுபிடித்தனர். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் மெசேஜ் வெளியிட்ட ரூபி,’தீபிகாவுடன் வீடு தேடி சென்றேன். கடற்கரை பகுதியில் அருமையான வீடு கிடைத்தது’ என குறிப்பிட்டிருப்பதுடன் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.