இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மணலி பேருந்து நிலையம் அருகே அம்மன் கோயில் உண்டியல் கொள்ளை

3/14/2016 2:45:50 PM
அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்

திருவொற்றியூர்: சென்னை மணலி பேருந்து நிலையம் அருகே உள்ள  தில்லை மாரியம்மன் ஆலயத்தில் நேற்றிரவு பூஜை முடிந்ததும் பூசாரி முருகன், கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் பூசாரி முருகன், கோயிலை திறக்க வந்தார்.அப்போது கோயில் கருவறைக்கு முன்பிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் பணமும் சில்லறைகளும் வெளியே சிதறி கிடந்ததைக் கண்டு பூசாரி முருகன் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து ஆலய நிர்வாகத் தலைவர் தவமணிக்கு முருகன் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மணலி காவல் நிலையத்தில் தவமணி புகார் கொடுத்தார். உண்டியலில் சுமார் ரூ. 20 ஆயிரம் காணிக்கை பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.இப்புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது கோயிலின் பின்பக்க சுவர் வழியாக மர்ம ஆசாமிகள் ஏறி குதித்து கொள்ளையடித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கோயிலுக்குள் இருந்த சிசிடிவி காமிராவிலும் கொள்ளையடித்த ஆசாமிகளின் உருவங்கள் பதிவாகி இருக்கின்றன. அவர்கள் அனேகமாக வடஇந்திய ஆசாமிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காமிராவில் பதிவான மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.மணலி பகுதியில் சமீபகாலமாக இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், அப்பகுதியில் உள்ள பல்வேறு கோயில் உண்டியல்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமலும், தீவிர ரோந்து பணிகளிலும் ஈடுபடாமலும் மெத்தனமாகஇருக்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மேலும் சில
  • மனைவியை வீட்டுக்குள் அடைத்துவிட்டு அரிசிக்கடைக்காரர் வெட்டிக் கொலை



  • அண்ணா சதுக்கம் காவல் நிலையம் அருகே வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி : ஒடிசா வாலிபர் கைது



  • தனியார் பஸ்சில் கடத்தப்பட்ட லேப்டாப், டி சர்ட்டுகள் பறிமுதல்



  • பறக்கும்படை வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் வாட்ச் பறிமுதல்



  • நியூ ஆவடி சாலையில் பணம் கேட்டு மருத்துவ மாணவருக்கு சரமாரி வெட்டு வழிப்பறி கும்பல் அட்டூழியம்



  • வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை : அண்ணா சாலையில் பரபரப்பு



  • காருக்குள் நடந்த கொடூரம் பேராசிரியையின் அக்கா கணவர் குத்திக்கொலை டிரைவர் உள்பட 3 பேர் கைது



  • கைதிகளுக்கு போதைபொருள் சப்ளை திகார் சிறை வார்டன் கைது



  • பெரம்பலூர் வங்கியில் ரூ. 2.19 கோடி முறைகேடு: மேலாளர் சிறையிலடைப்பு



  • வீட்டை பூட்டி தீ வைத்து வக்கீலை குடும்பத்துடன் கொல்ல முயற்சி



Facebook

Twitter

The only actor who plays the film
ஒரே நடிகர் நடிக்கும் படம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]