இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உத்திரமேரூர் பகுதியில் அம்மா சிமென்ட் பெற லஞ்சம்

3/14/2016 2:43:56 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

உத்திரமேரூர்: தமிழக அரசின் சார்பில் ஏழைகள் வீடு கட்டுவதற்காக மானிய விலையில் அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒரு மூட்டை ரூ.190 என்ற அளவில் விற்கப்படுகிறது. 100 சதுர அடியில் வீடு கட்ட வேண்டுமானால், 50 மூட்டை சிமென்ட் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேற்கொண்டு தேவைப்பட்டால் அதற்கான வரைபடத்தை காட்டினால் வழங்கப்படும். இதில் பயன்பெறும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட விஏஓ.விடம் கடிதம் பெறுவதோடு, வீடு கட்டுவதற்கான வரைபடத்தை அந்தந்த பகுதியில் உள்ள அரசின் சிமென்ட் குடோனில் கொடுத்து சிமென்ட் பெற்று கொள்ளலாம். இப்படி வழங்கப்படும் முறையில், சில இடங்களில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.

உத்திரமேரூர் பகுதிகளில் சிமென்ட் பெறுவதற்கான கையொப்பம் பெற விஏஓவுக்கு ரூ.100 கொடுத்தால்தான் கடிதம் வழங்கப்படுமாம். அதோடு மட்டுமல்லாமல், இத்தகையை கடிதம் மற்றும் வரைபடத்துடன் உத்திரமேரூர் அருகே பங்களாமேடு பகுதியில் உள்ள அரசின் சிமென்ட் குடோனில் சிமென்ட் வாங்க சென்றால் ஒரு மூட்டைக்கு ரூ.7 வசூலிக்கப்படுகிறது. மேலும் சிமென்ட் மூட்டைகளை வெளியே எடுத்து வந்தாலேயே அங்கிருக்கும் சிலர், ரூ.12 கொடுத்தால்தான், இங்கிருந்து வெளியே கொண்டு செல்ல இயலும் என்று கறாராக வசூலிக்கின்றனர். பணத்தை கொடுக்க மறுத்தால் பல்வேறு காரணங்களை காட்டி சிமென்ட் மூட்டைகள் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் ஏழை பயனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். அதே நேரத்தில் அதிமுக பிரமுகர்கள் சென்றால் அவர்களுக்கு உடனடியாக சிமென்ட் வழங்கப்படுகிறது. ஏழைகளை மட்டும் அலைகழிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என ஆதங்கத்தில் உள்ளனர்.

மேலும் சில
  • அத்வானி மனைவி மறைவு கருணாநிதி இரங்கல்



  • விஜயகாந்தை பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஓட்டம்



  • திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • பெரம்பலூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் போயஸ் கார்டனில் குவிந்த அதிமுகவினர்களால் பரபரப்பு



  • லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி



  • தேர்தல் விதிகளை காரணம் காட்டி தமிழகத்தில் வணிகர்கள் நசுக்கப்படுகின்றனர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு



  • அத்வானி மனைவி மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்



  • நந்தம்பாக்கத்தில் இன்று மாலை திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திண்டுக்கல் லியோனி பங்கேற்பு



  • குட்டையில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு



  • யுகாதி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]