இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பொன்னேரி நெடுஞ்சாலையில் டேங்கர் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி

3/14/2016 2:43:11 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவொற்றியூர்: மணலி அருகே பொன்னேரி நெடுஞ்சாலை முழுவதும் ஏராளமான டேங்கர் லாரிகளை நிறுத்துவதால், அப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவ மாணவிகள் உட்பட அனைத்து பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மணலியில் இருந்து பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக மாதவரம், திருவொற்றியூர், மீஞ்சூர் போன்ற பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள், பள்ளி வாகனங்கள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், பொன்னேரி நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிபிசிஎல் தொழிற்சாலையில் தார் ஏற்றிச் செல்வதற்காக ஏராளமான டேங்கர் லாரிகள் வருகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் தொழிற்சாலைக்குள் செல்லாமல், நெடுஞ்சாலையோரம் நீண்ட நேரம் வரிசையாக நிற்கின்றன.இவற்றில் ஒருசில டேங்கர் லாரிகளை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திவிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் மற்ற வாகனங்களும் செல்லும்போது, மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆம்புலன்சில் ஏற்றி வரப்படும் நோயாளிகள், தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வாகன நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.எனவே, பொன்னேரி நெடுஞ்சாலையில் டேங்கர் லாரிகளை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பொன்னேரி நெடுஞ்சாலையில் இனிமேலாவது டேங்கர் லாரிகளை ஓரமாக நிறுத்த சம்பந்தப்பட்ட நிறுவனமும் போக்குவரத்து உயர் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில
  • அத்வானி மனைவி மறைவு கருணாநிதி இரங்கல்



  • விஜயகாந்தை பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஓட்டம்



  • திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • பெரம்பலூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் போயஸ் கார்டனில் குவிந்த அதிமுகவினர்களால் பரபரப்பு



  • லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி



  • தேர்தல் விதிகளை காரணம் காட்டி தமிழகத்தில் வணிகர்கள் நசுக்கப்படுகின்றனர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு



  • அத்வானி மனைவி மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்



  • நந்தம்பாக்கத்தில் இன்று மாலை திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திண்டுக்கல் லியோனி பங்கேற்பு



  • குட்டையில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு



  • யுகாதி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]