இங்கிலாந்து குடிமகன் விவகாரம் : ராகுலுக்கு நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி நோட்டீஸ்
3/14/2016 2:42:47 PM
புதுடெல்லி: இங்கிலாந்து குடிமகன் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் விளக்கம் கேட்டு நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.காங்கிரஸ் துணை தலைவராக இருக்கும் ராகுல் காந்தி கடந்த 2003ம் ஆண்டு இங்கிலாந்தில் புதிய கம்பெனி ஒன்று தொடங்கியதாகவும், அதற்கான ஆண்டு நிதி அறிக்கையில் தன்னை ஒரு இங்கிலாந்து நாட்டின் குடிமகன் என தெரிவித்திருப்பதாகவும் பாஜவை சேர்ந்த சுப்பிரமணியசாமி கடந்த ஆண்டு இறுதியில் குற்றம் சாட்டினார்.
வெளிநாட்டு குடிமகனான ராகுலின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு பாஜ எம்பி மகேஷ் கிரி கடந்த ஜனவரி மாதம் புகார் கடிதம் அனுப்பினார். இந்த கடிதம் நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியிடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக லோக்சபா ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி தலைவர் அர்ஜுன்ராம் ெதரிவித்துள்ளார். ராகுல் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிகவும் முக்கியமானது. அவரிடமிருந்து விளக்கம் கிடைத்தபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அர்ஜுன்ராம் ெதரிவித்தார்.