இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

கர்ப்பகாலத்தில் வாந்தியை போக்கும் கறிவேப்பிலை

3/14/2016 2:38:22 PM
என்ஐஏ அதிகாரி கொலையில் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: உத்தரபிரதேச காவல்துறை அறிவிப்பு ஏழை மக்கள் வீடு கட்ட இலவச மணல்: ஆந்திர முதல்வர் அதிரடி

மகளிர் வாரத்தை முன்னிட்டு, கர்ப்ப காலம், மகப்பேறு சமயத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் மருந்துகள் குறித்து பார்ப்போம். கர்ப்பிணிகளுக்கு ஆரம்ப கட்டத்தில் காலையில் மயக்கம், பசியின்மை, சோர்வு, வாந்தி போன்றவை இருக்கும். இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்கும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை, சீரகம், மிளகு, தனியா, பனங்கற்கண்டு. அரை ஸ்பூன் சீரகம், 10 மிளகு, அரை ஸ்பூன் தனியா ஆகியவற்றை லேசாக தட்டி எடுக்கவும். இதனுடன் சிறிது கறிவேப்பிலை, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி குடித்தால் தலை சுற்றல் வாந்தி பிரச்னை சரியாகும். ஜீரண உறுப்புகள் தூண்டப்படும். பசியின்மை சரியாகும். ஈரலை பலமாக்கும். குமட்டலை போக்கி ருசியை தரக்கூடியது. கால் வீக்கம் சரியாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் மயக்கம், வாந்தி போன்றவை முதல் 3 மாதங்கள் இருக்கும். வாந்தி ஏற்படும்போது தாய், சேய்க்கு சத்து  கிடைக்காமல் போகிறது. தாய்க்கு ரத்தசோகை ஏற்படுவதுடன், குழந்தையின் எடை கூடாமல்  போகிறது. வாந்தி மயக்க பிரச்னையை இந்த தேனீர் சரிசெய்கிறது. கர்ப்பகாலத்தில் குமட்டலை கட்டுப்படுத்தி பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். சிறிது சீரகப் பொடியுடன் ஒரு சிட்டிகை சமையல் உப்பு, 10 சொட்டு நெய் சேர்த்து உருண்டையாக உருட்டி சாப்பிட்டால் குமட்டல் சரியாகும். நன்றாக பசி எடுக்கும்.

5 மாதங்களுக்கு பின் குழந்தைகள் உதைக்க ஆரம்பிக்கும். அப்போது வயிற்றுவலி ஏற்படும். இந்த வலியை போக்குவதற்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்யில், 20 வெந்தயத்தை போட்டு சிறுதீயில் சூடுபடுத்த வேண்டும். வெந்தயம் பொறிந்ததும் எண்ணெயை மட்டும் எடுத்து தொப்புளை சுற்றி போடும்போது வயிற்றுவலி சரியாகும். விளக்கெண்ணெய், வெந்தயம் குளிர்ச்சி என்பதால் அளவாகத்தான் பயன்படுத்த வேண்டும்.தாய்பாலை அதிகரிப்பதற்கான மருந்து தயாரிக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.

 ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பின் காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை குடித்துவர தாய்பால் சுரப்பு அதிகரிக்கும். தண்ணீர் விட்டான் கிழங்கு பால் பெருக்கியாக விளங்குகிறது. உடலில் இருக்கும் அழுக்கை வெளியேற்றுகிறது.  குழந்தை வளர்ச்சிக்கு சத்தான உணவு அவசியம். கீரை, காய்கறி, பழங்கள் மற்றும் பேரிச்சம் பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தில் உடல்நலத்தில் அக்கறை செலுத்தினால் ஆரோக்கியமான குழந்தை கிடைக்கும்.நன்றி: சன் டி.வி.

மேலும் சில
  • உடல் உஷ்ணத்தை தணிக்கும் கிர்ணி, வெள்ளரி



  • தலைமுடியை பாதுகாக்கும் செம்பருத்தி



  • உடல் துர்நாற்றத்தை போக்கும் எலுமிச்சை, வெட்டிவேர்



  • பற்களை பலப்படுத்தும் ஆலம் விழுது



  • உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல்



  • மூலத்தை குணப்படுத்தும் மாசிக்காய்



  • தூக்கமின்மையை போக்கும் கத்தரிக்காய்



  • கொழுப்பை குறைக்கும் பிரண்டை



  • தொண்டை புண்ணை ஆற்றும் இஞ்சி



  • சளி தொல்லையை போக்கும் தூதுவளை



Facebook

Twitter

ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]