ராஜீவ் காந்தி ஆரோக்யா
3/14/2016 2:36:29 PM
ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி ஆட்சியில், ஏழை மக்கள் மருத்துவ வசதி பெற ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் ‘ராஜீவ் காந்தி ஆரோக்யா’ என்ற பெயரில் சுகாதார அட்டை வழங்கப்பட்டது. தற்போது சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும், இந்த சுகாதார அட்டை ‘என்டிஆர் சுகாதார அட்டை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், விசாகப்பட்டினம் அருகே ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த பானாவது பாபேசு பாய் என்பவருக்கு வழங்கப்பட்ட சுகாதார அட்டையில், அவரது படத்துக்கு பதிலாக பிரபல இந்தி நடிகர் அபிதாப்பச்சனின் மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யாராயின் புகைப்படம் ஒட்டப்பட்டு உள்ளது. அந்த பெண்மணி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தபோதுதான் இந்த தவறே அனைவருக்கும் தெரியவந்தது. என்றாலும், இந்த தவறை எந்த அரசு அதிகாரிகளும் இதுவரை கண்டுகொள்ளவில்லை.