இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சென்னை உள்பட 8 மாநகர போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.5744 கோடி நஷ்டம் மத்திய அரசு பகீர் தகவல்

3/14/2016 2:34:19 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும்  சென்னை உள்பட 8 மாநகர போக்குவரத்து கழகங்கள் ரூ.5744 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள மெட்ரோ நகரங்களில்  மாநகர போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றன. கடந்த 2014-15ம் ஆண்டில் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 8 மாநகர போக்குவரத்து கழகங்கள் மொத்தமாக ரூ.5744 கோடி நட்டத்தில் இயங்குவதாக மத்திய போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இது இதர பகுதிகளில் பஸ்கள் இயக்கிய வகையில் மாநில போக்குவரத்து கழங்கள் சந்தித்த நட்டத்தை விட 50 சதவீதத்திற்கும் அதிகமாகும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கையில்,மாநகர போக்குவரத்து கழகங்களில் பெங்களூருதான் அதிகமான பேருந்துகளை இயக்கி வருகிறது. அதிகமான பயணிகள் மற்றும் வருவாயிலும் அதுதான் முன்னிலையில் உள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒரு பஸ் 798 பயணிகளை ஏற்றிச் செல்கிறது. ஆண்டு வருவாய் ரூ.2256.8 கோடியாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மும்பை 788 பயணிகளை ஏற்றிச் சென்று வருவாயில் ரூ.1508 கோடியை ஈட்டி தருகிறது. மூன்றாவது இடத்தை பிடித்துள்ள சென்னையில் நாள் ஒன்றுக்கு 1311 பயணிகளை ஏற்றிச் சென்ற போதிலும் வருவாயில் ரூ.1376.5 கோடியை மட்டுமே ஈட்டி தருகிறது. பெங்களுரி–்ல் 6649 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் சென்னையில் 3787 பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. இதே போல் டெல்லி,  மாநகர போக்குவரத்து கழகம்  ரூ.1113.2 கோடி, வருவாயை ஈட்டுகிறது.

கடந்த 2014-15ம் ஆண்டில் மெட்ரோ நகரங்களில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்து கழகங்கள் மூலமாக சுமார் 194 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இருந்த போதிலும் இவை அனைத்தும் நட்டத்திலேயே இயங்குகின்றன. கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி எரிபொருள் மற்றும் ஊழியர்கள் சம்பளத்திற்கே செலவாகி விடுவதால் மிஞ்சுவது எதுவும் இல்லை. வருவாயில் 55 சதவீதம் ஊழியர்களின் சம்பளத்திற்கே செலவாகி விடுகிறது என்றும் அது தெரிவித்துள்ளது. மாநகர போக்குவரத்து கழகங்களிலேயே கொல்கத்தா தான் ரூ.72.5 கோடி என்ற அளவில் மிகவும் குறைவான வருவாயை ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • காஷ்மீரில் 2 தீவிரவாதி சுட்டுக்கொலை



  • எச்சரிக்கை படங்கள் சிறியதாக இருப்பதாக புகார் மகாராஷ்டிராவில் ரூ. 273 கோடி சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்



  • நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் தலித், மாற்று திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் 100% ரத்து



  • வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்



  • கார்களில் கறுப்பு ஸ்டிக்கர்



  • செலவு மற்றும் கால விரயத்தை தவிர்க்க நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பரிசீலனை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தகவல்



  • ரயில்வே அமைச்சராக இருந்த போது சர்ச்சைக்குரிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியவர் மம்தா பாஜ குற்றச்சாட்டு



  • பாக். உளவுத்துறைக்கு நற்சான்றிதழ் அளித்த மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : கெஜ்ரிவால் சாடல்



  • அசாம் முதல் கட்ட வாக்குபதிவு கோகாய், சோனாவால் தொகுதியில் பெண்கள் அதிகளவில் வாக்களிப்பு தேர்தல் ஆணையம் தகவல்



  • அருணாச்சல், உத்தரகண்டைத் தொடர்ந்து மேகாலயாவில் தள்ளாடும் காங். ஆட்சி பாஜ சொல்கிறது



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]