பாக். போட்டியை விட உலக கோப்பையை வெல்வதில்தான் கவனம் செலுத்த வேண்டும் - கம்பீர்
3/13/2016 2:45:02 PM
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் கம்பீர் கொல்கத்தாவில் அளித்த பேட்டி: இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பது மற்ற போட்டிகளை போன்றதுதான். ஊடகங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக இந்த போட்டி பெரிதாக்கப்படுகிறது. விளையாட போகும் அனைத்து அணிகளும் கோப்பையை வெல்ல முயற்சிக்கும். எனவே டி20 உலக கோப்பையை கைப்பற்றுவதில்தான் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணிக்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் உள்ள குரூப்பில் இடம் பெற்றுள்ளதால், இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும். இந்த மூன்று அணிகளையும் எப்போதுமே கணிக்க முடியாது.
ஆனால் முந்தைய வரலாறுகளை பார்த்தால், இந்தியா வலுவானதாக உள்ளது. அதிக நம்பிக்கையுடன் தொடருக்குள் இந்தியா நுழைகிறது. ஆனால் டி20 போட்டிகளில், யார் வேண்டுமானாலும் வெற்றியை பறித்து சென்று விட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.