இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி

3/12/2025 5:01:25 PM
அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்

ஆவடி: சென்னை அம்பத்தூர், சபரி அய்யப்பன் நகர், வள்ளலார் தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல் (37). பேரீச்சம்பழ வியாபாரி. இவரது மனைவி லட்சுமிதேவி  (31). இவர்களுக்கு முத்துவேல் (12) என்ற மகனும், நித்யலட்சுமி (9) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் முறையே 6-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு படித்து  வருகின்றனர்.தனது வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக செந்தில்வேல் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். வியாபாரம் சரிவர இல்லாததால், அவரது  தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் செந்தில்வேலுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் ஏற்பட்டது.

அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். அவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் செந்தில்வேல் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இதனால் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள செந்தில்வேல் முடிவு செய்துள்ளார்.இந்நிலையில், நேற்றிரவு செந்தில்வேல் தனது மனைவி மற்றும்  2 குழந்தைகளுடன் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதனால் 4 பேருக்கும் வாந்தி ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு,  அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பத்தூர்  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • மனைவியை வீட்டுக்குள் அடைத்துவிட்டு அரிசிக்கடைக்காரர் வெட்டிக் கொலை



  • அண்ணா சதுக்கம் காவல் நிலையம் அருகே வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி : ஒடிசா வாலிபர் கைது



  • தனியார் பஸ்சில் கடத்தப்பட்ட லேப்டாப், டி சர்ட்டுகள் பறிமுதல்



  • பறக்கும்படை வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் வாட்ச் பறிமுதல்



  • நியூ ஆவடி சாலையில் பணம் கேட்டு மருத்துவ மாணவருக்கு சரமாரி வெட்டு வழிப்பறி கும்பல் அட்டூழியம்



  • வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை : அண்ணா சாலையில் பரபரப்பு



  • காருக்குள் நடந்த கொடூரம் பேராசிரியையின் அக்கா கணவர் குத்திக்கொலை டிரைவர் உள்பட 3 பேர் கைது



  • கைதிகளுக்கு போதைபொருள் சப்ளை திகார் சிறை வார்டன் கைது



  • பெரம்பலூர் வங்கியில் ரூ. 2.19 கோடி முறைகேடு: மேலாளர் சிறையிலடைப்பு



  • வீட்டை பூட்டி தீ வைத்து வக்கீலை குடும்பத்துடன் கொல்ல முயற்சி



Facebook

Twitter

The only actor who plays the film
ஒரே நடிகர் நடிக்கும் படம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]