இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருவள்ளூர் அருகே பரபரப்பு சிறுவனை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளை : பைக் ஆசாமிகளுக்கு வலைவீச்சு

3/12/2025 4:59:16 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுவனின் கை, கால்களை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை  போலீசார் தேடுகின்றனர்.திருவள்ளூர் அடுத்த தொடுகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (42). தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது  மனைவி வனிதா (36). இவர்களது மகன்கள் மாறன் (15), மதன் (12). நேற்றுகாலை சுகுமாரன் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில், வனிதாவும், மாறனும்  ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றனர். சிறுவன் மதன், வீட்டில் தனியாக இருந்தான். இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு 2 பேர் வந்தனர். அவர்கள் மதனிடம் குடிக்க  தண்ணீர் கேட்டுள்ளனர்.

இதையடுத்து மதன் தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்றான். அவனை பின்தொடர்ந்த மர்ம நபர்கள், சிறுவனை ஒரு அறையில் கட்டிப்போட்டனர். மற்றொரு  அறையில் இருந்த பீரோவை திறந்து, அதிலிருந்த 30 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை கொள்ளையடித்து  பைக்கில் சென்று விட்டனர்.இதனிடையே இரவு 8 மணிக்கு வீடு திரும்பிய வனிதா, மகன் கட்டப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கை, கால்களின்  கட்டுகளை அவிழ்த்துவிட்டனர். பதற்றத்துடன் இருந்த சிறுவனை பெற்றோர்கள் தேற்றினர்.

இதுகுறித்து மப்பேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு எஸ்பி சாம்சன், கூடுதல் எஸ்பி ஸ்டாலின், டிஎஸ்பி, விஜயகுமார்  மற்றும் போலீசார் விரைந்தனர். மோப்ப நாய் ரூபி வரவைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை  சேகரித்தனர்.இதுபற்றி மப்பேடு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.சிறுவனை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் திருவள்ளூரில் பெரும்  பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி நடிகை கே.ஆர்.விஜயா மகளுக்கு டார்ச்சர் ரியல் எஸ்டேட் அதிபர் கைது



  • ஓட்டல் தொழிலாளி கொலை



  • குன்றத்தூரில் இன்று காலை பயங்கரம் கழுத்து அறுத்து ஆசிரியை, தாய் கொலை : பேத்திக்கு கழுத்தில் வெட்டு; 50 பவுன், பணம் கொள்ளை



  • குடிலில் மனித எலும்புகள், மூளை மாந்த்ரீகம் பெயரில் நரபலி? பெரம்பலூர் அருகே பரபரப்பு



  • கோவில்பட்டியில் பயங்கரம் 2 பெண்கள் வெட்டி கொலை



  • வீடு உடைத்து 8 பவுன் கொள்ளை



  • ஓட்டல் தொழிலாளி கொலை: ஒருவர் கைது



  • 3 ஆயிரம் கிலோ மாம்பழம் பறிமுதல் : கோயம்பேட்டில் அதிரடி



  • லாரியில் ரூ. 13.50 லட்சம் பறிமுதல்



  • மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றாததால் தகராறு : கொத்தனார் அடித்து கொலை: குரோம்பேட்டையில் பயங்கரம்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]