இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

சட்டீஸ்கரில் துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

3/12/2025 4:46:05 PM
ஸ்டாலின், ஜெ. சென்னையில் போட்டி போட்டு பிரசாரம் தேர்தல் களம் சூடு பிடித்தது திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு அசாமில் இறுதி கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் முதல்வர் ராமன் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட் பாதிப்பு அதிகம் உள்ளது. இவற்றை சமாளிக்க முடியாமல் ராமன் சிங் அரசு திணறி வருகிறது. மாவோயிஸ்ட்களை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் சோட்டேபெத்தியா-பாகன்ஷோர் பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்து. இதை தொடர்ந்து இன்று அதிகாலை எல்லை பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இரு தரப்புக்கும் இடையே இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அடர்ந்த வனப்பகுதியில் பாந்தே காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் இந்த மோதல் நடந்துள்ளது. இதில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர் என டிஎஸ்பி ஜெயந்த் வைஷ்ணவ் தெரிவித்தார்.

மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், மாவட்ட போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு ராய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் விஜய் குமார் மற்றும் ராகேஷ் நேரா என தெரியவந்துள்ளது.ஏற்கனவே இந்த பகுதியில் போலீசாரின் போலி என்கவுண்டர்களை கண்டித்து மாவோயிஸ்ட்கள் ஒரு நாள் அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். போலீசாரிடம் சரண் அடைந்த பழங்குடியினரை தீவிரவாதிகள் என்று கூறி போலி என்கவுண்டரில் போலீசார் சுட்டு கொன்று விட்டதை கண்டிப்பதாக அப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பரபரப்பு போஸ்டர்களையும் ஒட்டியிருந்தனர்.இந்த சம்பவத்தால் சட்டீஸ்கரில் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் சில
  • இரண்டாம் உலகப்போர்



  • இணையங்களின் வரவால் உலகம் சுருங்கி விட்டது



  • வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்



  • அமெரிக்காவின் கன்சாஸ் பகுதி



  • மான்கள் என்றாலே கொள்ளை அழகு



  • சிரியாவில் 300 தொழிலாளர்களை கடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் மீட்க தீவிர நடவடிக்கை



  • அமெரிக்காவின் புளோரிடா மாகாணம்



  • வியட்நாம் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர்



  • செல்ல பிராணிகளான நாய்கள்



  • நவீன யுகத்தில் ரோபோக்களின் பயன்பாடு



Facebook

Twitter

ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]