பிரசாரத்தை ரத்து செய்தார் டிரம்ப்
3/12/2025 4:43:27 PM
சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை அடுத்து, சிகாகோவில் நடக்க இருந்த பிரசாரத்தை அவர் ரத்து செய்தார்.அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் களம் இறங்கியுள்ளனர். உள்கட்சி தேர்தலில் வெற்றிபெறுபவரே அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். இந்நிலையில், உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி, குடியரசு கட்சியின் டிரம்ப் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.இந்நிலையில், சிகாகோ பகுதியில் ஆதரவு திரட்ட டிரம்ப் திட்டமிட்டிருந்தார். இதற்காக அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நேற்று பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிரம்ப்பின் ஆதரவாளர்கள் திரண்டிருந்த நிலையில், டிரம்ப்பின் வருகையை எதிர்த்து சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.டிரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரசாரத்தை டிரம்ப் ரத்து செய்தார். பிரசாரத்தின்போது டிரம்ப் கூறும் ஒரு சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.