சூரிய கிரகணம்
3/12/2025 4:32:30 PM
சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் வரும்போது சூரிய ஒளி மறைக்கப்படுவதை ‘சூரிய கிரகணம்’ என்கிறோம். இந்த சூரிய கிரகணம் கடந்த 2 நாட்களுக்கு முன் அதிகாலையில் நடைபெற்றது. இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்க இயலவில்லை. இருப்பினும், ஆசியா, ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள நாடுகளில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. குறிப்பாக, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு பசிபிக் நாடுகள் சூரிய கிரகணத்தின்போது இருட்டாக மாறியது. இந்தோனேசியாவில், பைலிடங் மாகாணத்தில் உள்ள ஆலிவியர் கடற்கரையில் முழு சூரிய கிரகணமும் மிகத் தெளிவாக தெரிந்ததை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.