முக்கிய நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகை
3/12/2025 4:31:53 PM
முக்கிய நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடனும் மணலில் சிற்பத்தை உருவாக்குவது வழக்கம். இதற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. ஜெர்மனியில் உள்ள ருஜென் கடற்கரையில் மணல் சிற்ப கண்காட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கோரைப்பல் உள்ள கடல் குதிரை, பல்வேறு வகையான மீன்கள் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.