போஸ்னியா அன்ட் ஹெர்சேகோவினா நாடு
3/12/2025 4:31:33 PM
தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது போஸ்னியா அன்ட் ஹெர்சேகோவினா நாடு. இங்குள்ள புரோகோ பகுதியில் பாரம்பரியமிக்க வீடுகள் அதிகளவில் உள்ளன. இதே பகுதியை சேர்ந்தவர் தஜனா டிஜுரிக்(25). இவர், வீடுகளில் உள்ள புகை போக்கிகளை சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறார். 6 வயதில் இருந்து இப்பணியை அவர் மேற்கொள்கிறார். உயரமான வீடுகளில் ஏறி புகைபோக்கியை சுத்தம் செய்து ஆண்களுக்கு சவால் விட்டு வருகிறார். இஷ்டப்பட்டு இந்த பணியை தொடர்ந்து செய்வதாக தஜனா கூறுகிறார். இவருடைய பணியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.