இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பிஎன்பி பாரிபா ஓபன்; டாரியா கசட்கினா அசத்தல்

3/11/2025 2:58:48 PM
அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்

இந்தியன்வெல்ஸ்:  பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனை கசட்கினா, 2 முறை சாம்பியனான டேனியலா ஹன்டுசோவாவை வென்றார். அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் நகரில் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் நிகோலஸ் மாகுட், அர்ஜென்டினாவின் ரென்சோ ஓலிவோவை எதிர் கொண்டார். நேர்த்தியான சர்வீஸ்களை போட்ட நிகோலஸ் மாகுட், 6-2, 6-4 என நேர் செட்களில் ஓலிவோவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். நெதர்லாந்து வீரர் ராபின் ஹாசே 6-3, 6-4 என்ற செட்களில் அர்ஜென்டினாவின் டியகோ ஷ்வாட்ஸ்மேனை தோற்கடித்தார்.

அர்ஜென்டினா வீரர் லியனார்டோ மேயர், ஆஸி., வீரர் சாம் குரோத்துடன் பலப்பரீட்சை நடத்தினார். சாம் குரோத் 5 ஏஸ் சர்வீஸ்களை வீசிய போதிலும், அவரால் தனது சர்வீஸ் கேம்களை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. லியனார்டோ மேயர் 6-4, 6-3 என்ற செட்களில் சாம் குரோத்தை வென்று 2ம் சுற்றுக்குத் தகுதி பெற்றார். பிரான்செஸ் டியபோ(அமெரிக்கா), குய்டோ பெல்லா(அர்ஜென்டினா), ஆண்ட்ரே குஸ்னட்சோவ் (ரஷ்யா), போர்னோ கோரிக்(குரோஷியா), நிகோலஸ் அல்மாக்ரோ (ஸ்பெயின்) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை லாரென் டேவிஸ் 6-2, 6-4 என நேர் செட்களில் ஜப்பான் வீராங்கனை நவோ ஹிபினோவை தோற்கடித்தார். ஸ்லொவாகிய வீராங்கனை மக்டலேனா ரைபாரிகோவா 7-6(3), 6-2 என நேர் செட்களில் பிரிட்டன் வீராங்கனை லாரா ராப்சனை வென்றார். பியூர்டோரிகா வீராங்கனை மோனிகா பியூக் 6-1, 6-2 என்ற செட்களில் குரோஷிய வீராங்கனை மிர்ஜானா லூசிக்கை வென்றார். ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா, பிஎன்பி பாரிபா ஓபனில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஸ்லொவாகியாவின் டேனியலா ஹன்டுசோவாவை 6-2, 6-4 என நேர் செட்களில் வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் சில
  • எதிர்ப்புகளை மீறி மும்பையில் இன்று ஐபிஎல் கோலாகல துவக்க விழா பிசிசிஐ மீது முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் பாய்ச்சல்



  • பேட்டிங், பந்து வீச்சில் சிறந்த கலவையாக கேகேஆர் உள்ளது பயிற்சியாளர் காலிஸ் பேட்டி



  • சர்ப்பராஸ் அகமதுக்கு முழு ஆதரவு ஹபீஸ் பேட்டி



  • ரஸ்ஸல், நரைனுடன் இணைந்து சாம்பியன் டான்ஸ் கம்பீர் நம்பிக்கை



  • வால்வோ கார் ஓபன் வீனஸ் அதிர்ச்சி தோல்வி



  • நாளை ஐபிஎல் துவக்க விழா சாம்பியன் டான்ஸ் ஆடுகிறார் பிராவோ முதல் முறையாக எல்இடி ஸ்டம்புகள்



  • வாழ்க்கையுடன் கிரிக்கெட் எப்போதும் தொடர்புடையது பஞ்சாப் அணி ஆலோசகர் சேவாக் பேட்டி



  • கேப்டனாக ரெய்னா சிறப்பாக செயல்படுவார் பிராவோ நம்பிக்கை



  • ஆர்சிபிக்கு விளையாடுவதை அறிந்ததும் துள்ளி குதித்தேன் ஸ்டூவர்ட் பின்னி பேட்டி



  • ஆடவர் டென்னிஸ் தரவரிசை; முதலிடத்தில் ஜோகோவிச்



Facebook

Twitter

The only actor who plays the film
ஒரே நடிகர் நடிக்கும் படம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]