இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆஸி. சூப்பர் வெற்றி தொடரையும் வென்றது

3/10/2025 3:10:35 PM
அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்

கேப்டவுன்:   தென் ஆப்பிரிக்கா-  ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி டி20 போட்டி கேப்டவுனில் நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற  தெ.ஆ. முதலில் பேட்டிங் செய்தது.  அதிரடி வீரர் டிவில்லியர்சுக்கு பதில் அம்லா அணியில் சேர்க்கப்பட்டார்.  அம்லா- டி காக் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 4  ஓவரில் 47 ரன் எடுத்தது. டி காக் 13 பந்தில் 25 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த கேப்டன் டு பிளசிஸ் 4, ரோசோவ் 16 ரன்னில் ஆட்டம் இழக்க,  மில்லர் 16 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன் விளாசினார். 20 ஓவரில் தெ.ஆ. 4 விக்கெட் இழந்து 178 ரன் குவித்தது. அம்லா ஆட்டம் இழக்காமல் 62  பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 97 ரன் விளாசினார்.

பின்னர் களம் இறங்கிய ஆஸி.யின்  கவாஜா 33 (25 பந்து), வாட்சன்  42 (27 பந்து)  ரன்னில் வெளியேற கேப்டன்  ஸ்மித் 26 பந்தில் 44 ரன்னும், வார்னர் 33  ரன்னும் (27 பந்து) எடுத்தனர். 19.2 ஓவரில் ஆஸி. அணி 4 விக்கெட் இழந்து 181 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதல் போட்டியில்  தெ.ஆ.வும், 2வது போட்டியில் ஆஸி.யும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த வெற்றி மூலம் 2-1 என தொடரை ஆஸி. கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருதை  அம்லாவும், தொடர் நாயகன் விருதை  வார்னரும் பெற்றனர்.

மேலும் சில
  • எதிர்ப்புகளை மீறி மும்பையில் இன்று ஐபிஎல் கோலாகல துவக்க விழா பிசிசிஐ மீது முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் பாய்ச்சல்



  • பேட்டிங், பந்து வீச்சில் சிறந்த கலவையாக கேகேஆர் உள்ளது பயிற்சியாளர் காலிஸ் பேட்டி



  • சர்ப்பராஸ் அகமதுக்கு முழு ஆதரவு ஹபீஸ் பேட்டி



  • ரஸ்ஸல், நரைனுடன் இணைந்து சாம்பியன் டான்ஸ் கம்பீர் நம்பிக்கை



  • வால்வோ கார் ஓபன் வீனஸ் அதிர்ச்சி தோல்வி



  • நாளை ஐபிஎல் துவக்க விழா சாம்பியன் டான்ஸ் ஆடுகிறார் பிராவோ முதல் முறையாக எல்இடி ஸ்டம்புகள்



  • வாழ்க்கையுடன் கிரிக்கெட் எப்போதும் தொடர்புடையது பஞ்சாப் அணி ஆலோசகர் சேவாக் பேட்டி



  • கேப்டனாக ரெய்னா சிறப்பாக செயல்படுவார் பிராவோ நம்பிக்கை



  • ஆர்சிபிக்கு விளையாடுவதை அறிந்ததும் துள்ளி குதித்தேன் ஸ்டூவர்ட் பின்னி பேட்டி



  • ஆடவர் டென்னிஸ் தரவரிசை; முதலிடத்தில் ஜோகோவிச்



Facebook

Twitter

The only actor who plays the film
ஒரே நடிகர் நடிக்கும் படம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]