எங்க நடந்தாலும் வருவாங்க... ரவி சாஸ்திரி பேட்டி
3/10/2025 3:10:12 PM
கொல்கத்தா: உலக கோப்பை டி20 தொடரில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது குறித்து இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி கூறியது: எங்கே விளையாடுகிறோம் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் போட்டி எங்கு நடந்தாலும், அங்கு ரசிகர்கள் திரள்வார்கள். சொந்த மண்ணில் போட்டி நடப்பதால், இந்தியாவுக்கு பின்னால் ஏராளமான ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள். இளமையும், அனுபவமும் கலந்த அணியால்தான் உலக கோப்பையை கைப்பற்ற முடியும். இந்திய அணியில் தற்போது பாண்ட்யா முக்கியமான வீரர். டி20 போட்டிகளுக்கு இது போன்ற வீரர்கள் தேவை.