ஹிட்டுக்காக காத்திருக்கிறார் சமந்தா
3/10/2025 3:09:04 PM
‘கத்தி’ படத்தில் விஜய், ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணைந்த சமந்தா மீண்டும் அதே ஹிரோக்களுடன் ‘தெறி’, ‘24’ படங்களில் இணைந்திருக்கிறார். முதலில் ஜோடி சேர்ந்தபோது கிடைக்காத வரவேற்பு 2வது முறையாக ஜோடி சேரும்போது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறுமா என்பது கோடை விடுமுறையில் அடுத்தடுத்து வரவுள்ள 2 படங்களும் பதில் கூறும். ‘தெறி’ படத்துக்கு சமந்தா சொந்த குரலில் டப்பிங் பேசினார். ‘24’ படத்துக்காக அவர் கதாபாத்திரத்துக்கு சின்மயி டப்பிங் பேசி உள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘பிரம்மோத்ஸவம்’ படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. அவருடன் காஜல் அகர்வால், பிரணிதா என மேலும் 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வாரணாசியில் நடக்கிறது. அதில் பங்கேற்று நடித்து வருகிறார் சமந்தா.