சினிமா ராங் சென்டிமென்டை தூக்கி வீசுங்கள் இயக்குனர் கோபம்
3/10/2025 3:08:32 PM
விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘பிச்சைக்காரன்’. சசி இயக்கி உள்ளார். படத்தில் பணியாற்றியவர்களுக்கு நேற்று சென்னையில் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் இயக்குனர் மோகன்ராஜா பேசியது:இப்படத்தின் வெற்றி சினிமாவில் பேசப்படும் ராங் சென்டிமென்ட் விஷயத்தை தூக்கி எறிந்திருக்கிறது. தனிஒருவன் என டைட்டில் வைத்தபோது, ‘இதுபோல் ஏன் வைக்கிறீர்கள்’ என்றார்கள். அப்படம் ஹிட்டாகி ராங் சென்டிமென்ட் என்றவர்களின் வாயை அடைத்தது. ‘தனிஒருவன்’ என்று வைத்ததற்கே ‘பிச்சைக்காரன்’ டைட்டில் வைத்ததுபோல் பேசுகிறார்களே, ‘பிச்சைக்காரன்’ பட டைட்டிலுக்கு என்ன சொல்லப்போகிறார்களோ என நினைத்தேன். அதையும் பலர் ராங் சென்டிமென்ட் என்று சொல்லி இருக்கிறார்கள். அதையெல்லாம் இந்த வெற்றி உடைத்திருக்கிறது. துணிச்சலாக டைட்டில் வைத்த இயக்குனர் சசி, அதை ஏற்று நடித்த விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துகள்.இவ்வாறு மோகன்ராஜா பேசினார். டைரக்டர்கள் லிங்குசாமி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், சரவணன், நடிகைகள் சாத்னா டைட்டஸ், தீபா பங்கேற்றனர்.