பாலிவுட் நம்பிக்கை இழக்கிறார் காஜல் அகர்வால்
3/10/2025 3:08:11 PM
தமிழ், தெலுங்கில் காஜல் அகர்வால் மவுசு குறைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்யின் 60வது படத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு சென்றது. தெலுங்கிலும் ஏற்கனவே நடித்து வரும் 2 படங்கள் தவிர புதிய படங்கள் புக் ஆகவில்லை. முன்னதாக ‘சிங்கம்’ பட ரீமேக் மூலம் இந்திக்கு சென்றவர் படம் ஹிட் ஆகியும் வாய்ப்புகள் எதிர்பார்த்தளவுக்கு கைகூடி வராததால் ஏமாற்றம் அடைந்தார். நீண்ட காத்திருப்புக்குபிறகு ‘டு லஃப்ஸோன் கி கஹானி’ படத்தில் ரன்தீப் ஹுடா ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இது ஆறுதலாக இருந்தாலும் தற்போது இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்துக்கு பிறகு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறார். தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்க இப்படம் கைகொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த ஆண்டுக்குள் இப்படம் முடிந்து திரைக்கு வரும் என்ற நம்பிக்கை இல்லாததால் பாலிவுட்டில் மார்க்கெட் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார் காஜல் அகர்வால்.