அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு கோயிலில் சிறப்பு மரியாதை செய்ய தடை
3/10/2025 2:46:10 PM
திருவள்ளூர்: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை அறநிலையத்துறை ஊழியர்கள் நேரடியாக கோயில் கருவறைக்கு அருகாமையில் அழைத்து சென்று, சாமி கும்பிடவும், சிறப்பு மரியாதை வழங்கவும் ஏற்பாடு செய்வார்கள். தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு தரிசனம் செய்ய வரக்கூடும். அவர்களை அறநிலையத்துறை ஊழியர்கள், கோயில் கருவறை வரை அழைத்து சென்று சிறப்பு மரியாதை செய்ய கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை கடிதத்துடன் வருபவர்களையும் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்ககூடாது என அறநிலையத்துறை சார்பில் கோயில் அலுவலர்கள், ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.