இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

உடல் எடையை குறைக்கும் கொள்ளு

3/9/2025 2:51:58 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

பெண்களுக்கு உடல் எடையை கூட்டுவது, குறைப்பதற்கான உணவு குறித்து நாம் பார்ப்போம். தைராய்டு சுரப்பி சரியான முறையில் வேலை செய்யாததால் எடை கூடும். சரியான வகையில் உடல் உழைப்பு தேவை. வீட்டு வேலைக்கு இயந்திரங்களை பயன்படுத்துவது, உணவு முறையில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றால் உடல் எடை அதிகமாகிறது. எனவே, நேரத்துக்கு உணவு சாப்பிட வேண்டும். எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும். கொள்ளுவை பயன்படுத்தி உடல் எடையை குறைப்பதற்கான மருந்து தயாரிக்கலாம். கொள்ளுவை வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து ஊறவைத்த கொடம்புளி தண்ணீர் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் தினமும் 100 மில்லி அளவுக்கு குடித்துவர உடல் எடைகுறையும். இதை குடித்தால் சிலருக்கு அசிடிட்டி வரலாம். இதை தவிர்க்க மோர் குடிக்கலாம். கொள்ளு உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும்.

கல்யாண முருங்கை இலையை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் தேனீர் தயாரிக்கலாம். 4 கல்யாண முருங்கை இலைகளை துண்டுகளாக்கி கொள்ளவும். இதனுடன் 10 மிளகு தட்டி போடவும். ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி வெறும் வயிற்றில் தினமும் 100 மில்லி குடித்துவர உடல் எடை குறையும். காலையில் வெறும் வயிற்றில், 2 கல்யாண முருங்கை இலைகளுடன், 5 மிளகு சேர்த்து வெற்றிலை போன்று மடித்து இலையின் சாற்றை சாப்பிட்டு விட்டு சக்கையை துப்பிவிட வேண்டும். இது உடல் எடையை குறைக்கும். கல்யாண முருங்கையின் தண்டுகள் அடர்த்தியான முட்களை உடையது. சிவந்த பூக்களை கொண்டது. பூவரச இலைகள் போன்று இருக்கும். அழகுக்காக வளர்க்க கூடியது.

இந்த இலைகள் மூட்டுவலியை குறைக்க கூடியது. உஷ்ணமான தன்மை உடையது என்பதால் சளியை போக்க கூடியது. தேனீராக்கி குடிப்பதன் மூலம் தேவையற்ற கொழுப்பை கரைக்கும். இதை அடிக்கடி எடுத்து கொள்வதால் உடல் எடை குறையும்.உடல் எடையை அதிகரிக்கும் கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு, ஏலக்காய், முந்திரி, பிஸ்தா, பாதாம், பால், நாட்டு சக்கரை, நெய்.

உளுந்தம் பருப்பை லேசாக வறுத்து ஏலக்காய் சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதேபோல், முந்திரி, பிஸ்தா, பாதாம் ஆகியவற்றை பொடி செய்துகொள்ளவும். இவைகளில் இருந்து தலா ஒரு ஸ்பூன் பொடி எடுத்து தண்ணீர் ஊற்றி கலக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து, அதில் நாட்டு சர்க்கரையை போட்டு கொதிக்க வைக்கவும். இதில் அரை ஸ்பூன் நெய் சேர்க்கவும். இதை நன்றாக காய்ச்சியவுடன் ஏற்கனவே கலந்து வைத்திருந்த கலவையை  சேர்க்கவும். இது நன்றாக வெந்தவுடன் காய்ச்சிய பால் சேர்க்கவும். காலையில் உணவு சாப்பிட்ட பின் இந்த கஞ்சியை குடித்துவர உடல் எடை கூடும். உடல் மெலிந்தவர்கள் காலையில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும்.நன்றி: சன் டி.வி.

மேலும் சில
  • வயிற்றுக் கோளாறுகளை போக்கும் இளநீர்



  • உடல் உஷ்ணத்தை தணிக்கும் கிர்ணி, வெள்ளரி



  • தலைமுடியை பாதுகாக்கும் செம்பருத்தி



  • உடல் துர்நாற்றத்தை போக்கும் எலுமிச்சை, வெட்டிவேர்



  • பற்களை பலப்படுத்தும் ஆலம் விழுது



  • உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல்



  • மூலத்தை குணப்படுத்தும் மாசிக்காய்



  • தூக்கமின்மையை போக்கும் கத்தரிக்காய்



  • கொழுப்பை குறைக்கும் பிரண்டை



  • தொண்டை புண்ணை ஆற்றும் இஞ்சி



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]