ஹாலிவுட்டில் நுழைந்த தமிழ் நடிகை
3/7/2025 2:37:13 PM
பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அமைரா தஸ்தர் என பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் படங்களுக்கு பிரவேசித்துக்கொண்டிருக்கின்றனர். நம்மூர் நடிகைகள் ஒரு சிலர் தவிர பல ஹீரோயின்கள் பாலிவுட்பக்கம் தலைகாட்ட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தில் அறிமுகமானவர் அபிநயா. ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஈசன்’, ‘7ம் அறிவு’ படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘அடிடா மேளம்’, ‘விழித்திரு’, ‘தாக்க தாக்க’ படங்களில் நடித்து வருகிறார். காது கேளாத, வாய்பேசாத மாற்றுத்திறனாளியான அபிநயா சககலைஞர்கள் வியக்கும் வண்ணம் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாலிவுட் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.ஆங்கிலத்தில் உருவாகும் ‘ஒன் லிட்டிங் பிங்கர்’ படத்தில் மாற்றுத்திறனாளியாகவே நடிக்கிறார் அபிநயா. இதன் கதையே மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட் டைரக்டர் ருபம் சர்மா இயக்குகிறார். இப்படம் மூலம் அபிநயா சர்வதேச படவுலகில் நுழைந்திருக்கிறார்.