இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

அம்பத்தூர் அருகே மகன் தாக்கியதில் தந்தை பலி: குடிபோதையால் விபரீதம்

3/5/2025 1:29:50 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு


ஆவடி, சென்னை அம்பத்தூரை அடுத்த மங்களபுரம், குள்ளன் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (50). இவரது மனைவி முத்தமிழ்செல்வி (45). இவர்களுக்கு பிரதீப்ராஜ் (20) என்ற மகனும். சவுமியா (17) என்ற மகளும் உள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒலிபெருக்கி நிலையம் ஒன்றில் பிரதீப்ராஜ் வேலை செய்து வருகிறார். சவுமியா பிளஸ் 2 படித்து வருகிறார். ஸ்ரீதர் வேலைக்கு செல்லாமல் நாள்தோறும் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து, மனைவி மற்றும் மகளுடன் வாய் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில், நேற்றிரவு ஸ்ரீதர் அளவுக்கு அதிகமான குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் பிரதீப்ராஜும் வேலை முடித்து இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் ஸ்ரீதர், அவர் மீது துப்பியுள்ளார். மேலும் அரைகுறை ஆடைகளுடன் ஸ்ரீதர் தள்ளாடி கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் ‘ஏன் இப்படி அலங்கோலமாக திரியுறீங்க?’ என்று தந்தையை பிரதீப்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப்ராஜ், அங்கிருந்த உருட்டுக்கட்டையால் ஸ்ரீதரின் தலையில் பலமாக அடித்துள்ளார்.

இதில் ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.பின்னர் ஸ்ரீதரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் நள்ளிரவில் பிரதீப்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • வங்கி ஊழியர்கள் 11வது மாநில மாநாடு கோவையில் 25ம் தேதி முதல் 3 நாள் நடக்கிறது



  • போலி நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விருந்தா? திருமண மண்டபங்களுக்கு எச்சரிக்கை



  • ஸ்ரீ ஞானசுந்தர விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா



  • உத்திரமேரூர் அருகே சூரசம்ஹாரம்



  • நந்திவரம் பெரிய ஏரியை சீரமைக்க கோரிக்கை



  • உத்திரமேரூரில் மக்கள் நீதிமன்றம்



  • ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தேர்தல் அதிகாரிகள் பங்கேற்பு



  • அவசர கோலத்தில் ஜெயலலிதா திறந்த உத்திரமேரூர் அரசு கல்லூரியில் அவலம் மாணவர்கள் அமர இருக்கை இல்லை



  • தமிழகம் முழுவதும் அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு



  • ஆணவக் கொலையை கண்டித்து மக்கள் நல கூட்டணி ஆர்ப்பாட்டம்



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]