எல்லாபுரம் ஒன்றியத்தில் ரூ 1 கோடி நிதியில் மேம்பாட்டு பணிகள் சி.எச்.சேகர் அடிக்கல் நாட்டினார்
3/5/2025 1:27:28 PM
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள வடமதுரை, பெரியபாளையம், ஆத்துப்பாக்கம், தண்டலம், மாளந்தூர், லட்சிவாக்கம், சீனிகுப்பம், பேரன்டூர், தாமரைக்குப்பம், திருக்கண்டலம், ஆலப்பாக்கம், அக்கரப்பாக்கம், அத்தங்கி காவனூர், சின்ன செங்காத்தா குளம், பனையஞ்சேரி உள்ளிடட கிராமங்களில் கும்மிடிப்பூண்டி தொகுதி தேமுதிக எம்எல்ஏ சி.எச்.சேகர், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 1 கோடியில் இருந்து சமுதாயக்கூடம், ஆழ்துளைக் கிணறு, கலையரங்கம், சிமெண்ட் சாலை ஆகியவற்றை அமைப்பதற்காக நேற்று காலை அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் விஜயபிரசாத் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் செல்வகுமார், சம்பத், ஞானபழனி, சாமிநாதன், சுரேஷ்பாபு, சிவகுமார், பாஸ்கர், சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அந்தந்த பகுதி கிளை செயலாளர்கள் வரவேற்றனர். இதில் கும்மிடிப்பூண்டி தேமுதிக எம்எல்ஏ சி.எச்.சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றினார்.