இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

அங்கன்வாடி மைய கல்வெட்டில் பேரூராட்சி தலைவர் பெயர் புறக்கணிப்பு

3/5/2025 1:27:02 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

புழல்,: செங்குன்றம் பேரூராட்சி 12-வது வார்டு மக்கள் முன்னேற்ற மன்றம் தெருவில், மாதவரம் தொகுதி நிதியில் இருந்து 2014-15-ம் ஆண்டுக்கான நிதியில் ரூ 5.75 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், நேற்று காலை தொகுதி எம்எல்ஏ மாதவரம் மூர்த்தி இந்த அங்கன்வாடி மையத்தை அவசர அவசரமாகத் திறந்து வைத்தார்.

அவர் திறந்து வைத்த கல்வெட்டில் பேரூராட்சி தலைவரான திமுகவை சேர்ந்த ராஜேந்திரன், துணை தலைவர் விப்ரா நாராயணன் மற்றும் திமுக. தேமுதிக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களின் பெயர்கள் பொறிக்கப்படவில்லை.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, பேரூராட்சி உதவி இயக்குநர் இந்திரா ஆகியோருக்கு சம்பந்தப்பட்டவர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

‘இந்த அங்கன்வாடி மையம் தொகுதி எம்எல்ஏ நிதியிலிருந்து கட்டப்பட்டது. பேரூராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. இது அதிமுக கட்சி நிதியிலிருந்து கட்டப்பட்ட கட்டிடம் இல்லை. அனைத்து கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களால் கட்டப்பட்ட இக்கட்டிடத்தில் எங்களது பெயர் பொறிக்கப்படாமல் இருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. கடந்த திமுக ஆட்சியின்போது கட்சி பாகுபாடின்றி புதிதாக கட்டப்பட்ட அனைத்து அரசு கட்டிடங்களிலும் அனைவரது பெயரும் போடப்பட்டது. ஆனால், இவர்கள் தேர்தல் தேதியை மனதில் வைத்து அவசர அவசரமாக எங்களை புறக்கணித்து செயல்படுவது கண்டனத்துக்குரியது’ என்று பாதிக்கப்பட்ட கவுன்சிலர்கள் கூறுகின்றனர்.

மேலும் சில
  • வங்கி ஊழியர்கள் 11வது மாநில மாநாடு கோவையில் 25ம் தேதி முதல் 3 நாள் நடக்கிறது



  • போலி நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விருந்தா? திருமண மண்டபங்களுக்கு எச்சரிக்கை



  • ஸ்ரீ ஞானசுந்தர விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா



  • உத்திரமேரூர் அருகே சூரசம்ஹாரம்



  • நந்திவரம் பெரிய ஏரியை சீரமைக்க கோரிக்கை



  • உத்திரமேரூரில் மக்கள் நீதிமன்றம்



  • ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தேர்தல் அதிகாரிகள் பங்கேற்பு



  • அவசர கோலத்தில் ஜெயலலிதா திறந்த உத்திரமேரூர் அரசு கல்லூரியில் அவலம் மாணவர்கள் அமர இருக்கை இல்லை



  • தமிழகம் முழுவதும் அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு



  • ஆணவக் கொலையை கண்டித்து மக்கள் நல கூட்டணி ஆர்ப்பாட்டம்



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]