ஆலங்குடி குரு கோயிலில் 1008 சங்காபிஷேகம்
3/5/2025 1:08:23 PM
வலங்கைமான்: ஆலங்குடி குருபகவான் கோயிலில் 1008 சங்காபிஷேகம் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார ஸ்தலமாக திருவாரூர் மாவட்டம், வலங்கை மான் அடுத்த ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இது தேவார பாடல் பெற்ற தலமாகும். இதில் மாசிமகா குருவார தரிசன விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை வெட்டாற்றிலிருந்து யானை மீது புனிதநீர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
இதைதொடர்ந்து காலை யாகசாலை பூஜை, ஆபத் சகாயேஸ்வரர் சன்னதியில் பஞ்சமுக அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. குருபகவானுக்கு நேற்று தங்க கவச அலங்காரம், கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி அம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வரும் 10ம் தேதி குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.