பள்ளி மாணவி பலாத்காரம் ஆசிரியருக்கு ஓராண்டு சிறை
3/5/2025 1:06:30 PM
மார்த்தாண்டம்: பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.குமரி மாவட்டம் ஆறுகாணி பகுதியை சேர்ந்தவர் ஜோபி ஜேம்ஸ் (48). ஆறுகாணி பகுதியில் உள்ள ஒரு தனியார் உயர்நிலை பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அத்துடன் இசை வகுப்பு நடத்திவந்த அவர், சில மாணவிகளின் வீடுகளுக்கு சென்று பாட்டு சொல்லிக்கொடுத்துள்ளார்.
கடந்த 2010-11ம் ஆண்டு 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் வீட்டிற்கு பாட்டு சொல்லிக்கொடுக்க சென்றபோது செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பெற்றோரிடம் மாணவி சொல்லி உள்ளார்.ஆறுகாணி போலீசில் புகார் கொடுத்தனர். ஆசிரியர் ஜோபி ஜேம்ஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ேபாராட்டம் நடத்தினர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தது.
முக்கூட்டுக்கல் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றியபோதும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இறுதி விசாரணை குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் -1ல் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவுதம், ‘’ஆசிரியர் ஜோபி ஜேம்சுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.