உலக கோப்பையில் யுவராஜ் அதிரடியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் சேவாக் பேட்டி
3/5/2025 1:04:09 PM
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் அளித்துள்ள பேட்டி: யுவராஜ் சிங் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் அவரின் அதிரடி ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. 4வது வரிசையில் அவர் களம் இறங்க வேண்டும் என்பது எனது ஆசை. நமது மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களால் எளிதாக விக்கெட் கைப்பற்ற முடியும். உலக கோப்பையில் இந்தியா சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது. மூத்த வீரர்களான யுவராஜ், ஹர்பஜன் சிங், நெஹ்ரா ஆகியோரின் அனுபவமும் கைகொடுக்கும்.