இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

உலக கோப்பையில் சிறப்பாக ஆடுவோம் பாக். கேப்டன் அப்ரிடி நம்பிக்கை

3/5/2025 1:03:27 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

மிர்பூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. 37 பந்துகளில் 48 ரன் எடுத்த உமர் அக்மல் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி கூறுகையில், ‘‘இன்றைய போட்டியில் அனைத்தும் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. சேசிங்கின் போது முதல் 6 ஓவரில் அதிக விக்கெட் இழக்காமல் இருப்பது முக்கியம். அது இன்றைய ஆட்டத்தில் நடந்தது.  வெற்றிக்காக இளம் வீரர்கள் கடுமையாக உழைத்தனர். இந்த வெற்றியால், உலக கோப்பையில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.

இலங்கை கேப்டன் சண்டிமால் கூறுகையில், ‘‘நாங்கள் 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் திருப்புமுனையாக அமைந்திருக்கும். பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பந்து வீச கடினமாக இருந்தது. முன்னணி வீரர்கள் காயம் முக்கிய பிரச்னையாக உள்ளது,’’ என்றார்.ஆட்ட நாயகன்விருது பெற்ற அக்மல் கூறுகையில், ‘‘பயிற்சியாளர் வக்கார், உலக கோப்பை தொடருக்கு முன் வெற்றியுடன் செல்ல வேண்டும் என  என்னை ஊக்கமூட்டியதால் கூடுதல் கவனத்துடன் ஆடினேன்,’’ என்றார்.

மேலும் சில
  • வங்க புலியை விரட்டுமா இந்தியா பெங்களூரில் இன்று மோதல்



  • ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி எனது கடைசி ஆட்டமாக இருக்கலாம் பாக். கேப்டன் அப்ரிடி விரக்தி



  • மீண்டும் சர்ச்சையில் அப்ரிடி



  • அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது ஆஸ்திரேலியா வங்கதேச பவுலர்களுக்கு ஸ்மித் பாராட்டு



  • கண்ணீர் விட்ட மோர்டசா வீதியில் இறங்கி வங்கதேச ரசிகர்கள் போராட்டம் தஷ்கின், சன்னி தடை விவகாரத்தில் கொந்தளிப்பு



  • கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் 9ம் சுற்றில் ஆனந்த் வெற்றி



  • சிக்கலில் நடப்பு சாம்பியன் இலங்கை வெ.இண்டீசுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் கெய்லுக்கு பிளட்சர் நன்றி



  • நெருக்கடியில் ஆஸ்திரேலியா



  • அனுஷ்கா சர்மா டுவீட் ...



  • பாகிஸ்தானுடன் இன்று அக்னிப்பரீட்சை கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்தியா தோற்றால் அரையிறுதி ‘அம்போ’



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]