மலேஷிய ஓபன் டென்னிஸ்; அரையிறுதியில் புச்சார்டு
3/5/2025 1:03:04 PM
கோலாலம்பூர்: மலேஷிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் விளையாட கனடா வீராங்கனை யூஜினி புச்சார்டு தகுதி பெற்றுள்ளார். மலேஷிய ஓபன் டென்னிஸ் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் கனடா நாட்டு வீராங்கனையான யூஜினி புச்சார்டு, தர வரிசையில் 128வது இடத்தில் உள்ளவரான துருக்கி வீராங்கனை காக்லா புயுகாக்கேவை எதிர் கொண்டார். அதிரடி சர்வீஸ்கள் மூலம் காக்லாவை திணற அடித்த யூஜினி புச்சார்டு, 6-1, 6-4 என நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் பிரிட்டன் வீராங்கனை நவோமி பிராடி 7-6(4), 1-6, 7-5 என்ற செட்களில் 3ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் சபைன் லிசிக்கியை வென்றார். 2ம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா சுவிடோலினா காலிறுதி ஆட்டத்தில் 1-6, 6-1, 6-1 என்ற செட்களில் ஸ்லொவாகிய வீராங்கனை கிறிஸ்டினா குகோவாவை வீழ்த்தினார்.