ஊர்மிளா திடீர் திருமணம்: மாஜி காதலர் ஷாக்
3/5/2025 1:01:41 PM
பிரீத்தி ஜிந்தாவை தொடர்ந்து ‘ரங்கீலா’, தமிழில் ‘இந்தியன்’ பட புகழ் ஊர்மிளா ரகசிய திருமணம் செய்திருக்கிறார். காஷ்மீரை சேர்ந்த மிர் மோஷின் அக்தரை நேற்றுமுன் தினம் டெல்லியில் மணந்தார். இந்து முறைப்படி திருமணம் நடந்தது. இந்த தகவல் வெளியானதும் ஊர்மிளாவுக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஊர்மிளா படங்களில் நடித்தும் பிரபலமாகாமல் இருந்தார். அவரை புகழ் உச்சியில் ஏற்றிவிட்டவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. ரங்கீலா, சத்யா, பூத், பியார் துனே கியா கியா, ஜங்கிள், கவுன் என அடுத்து அவரை வைத்து படங்களை இயக்கிய ராம்கோபால் வர்மாவுக்கும், ஊர்மிளாவுக்கும் காதல் என்று அப்போது கிசுகிசுக்கள் பரவியது. அவ்வப்போது அதை மறுத்து வந்தார் வர்மா.
குடும்பத்திலும் பிரச்னை தலை தூக்கத் தொடங்கியதால் ஒரு கட்டத்தில் வேறு ஹீரோயின்கள் பக்கம் கவனத்தை திருப்பினார் வர்மா. விட்டால்போதுமென்று சத்தமில்லாமல் ஒதுங்கிக்கொண்ட ஊர்மிளா அதன்பிறகு படங்களை ஒப்புக்கொள்ளாமல் தனக்குதானே ஓரம்கட்டிக்கொண்டு ஒதுங்கி வாழ்ந்தார். 42 வயதில் அவரது திருமணம் நடந்தேறி இருக்கிறது. திருமணம்பற்றி தனது குருவான வர்மாவுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. திடீரென்று இணைய தளங்களில் நேற்றுமுன்தினம் புகைப்படத்துடன் ஊர்மிளா திருமண தகவல் வெளியானதை கண்டு ஷாக் ஆனார் வர்மா. மனதை தேற்றிக்கொண்டு டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ‘நான் பணியாற்றிய நடிகைகளிலேயே மிகவும் அழகானவர் ஊர்மிளா. அவரது திருமணம்பற்றி அறிந்தேன். வாழ்நாள் முழுவதும் ‘ரங்கீலா’ போல் சந்தோஷமாக இருக்க இதயபூர்வ வாழ்த்துக்கள்’ என தெரிவித்திருக்கிறார்.