இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நேரு பல்கலை கழகத்தில் தேச விரோத கோஷம் கன்னையா குமாருக்கு நேரடி தொடர்பு இல்லை டெல்லி அரசு விளக்கம்

3/4/2025 3:50:26 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

புதுடெல்லி: நேரு பல்கலை கழகத்தில் தேச விரோத கோஷம் எழுப்பிய விவகாரத்தில் கன்னையா குமாருக்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை என  நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.டெல்லி நேரு பல்கலை கழகத்தில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி நடைபெற்ற அப்சல் குரு நினைவு தின நிகழ்ச்சியின்  போது தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக பரபரப்பு எழுந்தது. இதை தொடர்ந்து மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்ட  மாணவர்கள் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கன்னையா குமாருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கி விடுதலை  செய்யப்பட்டுள்ளார்.இந்த சூழலில் கன்னையா குமார்  உள்ளிட்ட மாணவர்கள் தேச விரோத கோஷங்கள் எழுப்பிய விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு சார்பில்  விசாரணை நடத்தப்பட்டது.

டெல்லி அரசின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.அந்த அறிக்கையில், பல்கலையில் தேச  விரோத கோஷங்கள் எழுப்பியது தொடர்பாக கன்னையா குமாருக்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை. மற்ற மாணவர்களான உமர் காலித் உள்ளிட்டோர்  நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கவும் செய்துள்ளனர். இருந்த போதிலும் கோஷம்  எழுப்பியது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோஷம் எழுப்பியது உண்மைதான் என்பது  உறுதியாகியுள்ளது. அவ்வாறு கோஷம் எழுப்பிய மாணவர்கள் சிலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவை குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட  வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சில
  • பெல்ஜியம் குண்டு வெடிப்பு இந்தி பாடகர் அபிஜித் குடும்பம் சிக்கி தவிப்பு



  • ஆம் ஆத்மி அரசுக்கு கவர்னர் நஜீப் பாராட்டு



  • மே.வங்க சட்டமன்ற தேர்தல் பாஜ 3வது பட்டியல் வெளியீடு



  • குண்டுவெடிப்பு நடந்த பிரஸ்செல்ஸ் நகருக்கு மோடி 30ம் தேதி பயணம்



  • அகமதாபாத்தை சேர்ந்தவர் ராம் சிங் சவுகான்



  • ராகுலுடன் கன்னையா குமார் சந்திப்பு



  • காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மோடியுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது மெகபூபா பேட்டி



  • மும்பை தாக்குதல் குற்றவாளி ஹெட்லியிடம் நாளை குறுக்கு விசாரணை



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ. 3 கோடி காணிக்கை



  • அசாம் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய்க்கு ரூ. 5 கோடி சொத்து



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]